Kaatrile- Madharasapattinam Lyrics


 

ஆயிரம் ஆயுதம் எதிர் வரும் போதும்

 
அன்பெனும் சக்தியை வென்றவரில்லை
 
காரிருள் நீங்கிடும்  காலையில் மறுபடி கிழக்கினில் ஒளி வருமே
 
பேய்களும் நரிகளும் துரத்திடும்போதும்
 
பாதையில் பள்ளங்கள் பறித்திடும்போதும்
 
போர்க்களம் நடுவினில் ரகசியமாக பூவொன்று மலர்ந்திடுமே 
 
விழுந்தோம் எழுந்தோம்….. 
காற்றிலே காற்றிலே ஈரங்கள் கூடுதே 

கண்களின் நீரது காற்றினில் சேருதே 

நீயென்று நானென்று தனியானது

இன்று நாமென்று ஒன்றாகும் நிலையானது

நெஞ்சோடு நேசித்த பந்தம் இது

இன்று கைசேர கண்ணீரே விலையானது

நதி போகும் வழியில் யாரும்

அணைபோட்டு தடுத்திடக்கூடும்

மேகத்தில் அணைபோட வழியில்லையே 

நிகழ்காலம் கண்ணின் முன்னே 

வருங்காலம் கனவின் பின்னே 

விதிபோடும் கணக்கிற்கு விடையில்லையே 

இரவும் பகலும் தளரும் 

வெயிலும் மழையும் தொடரும் 

இதயம் இணையும் தருணம் வருமா 

இருளும் ஒளியும் வழங்கும்

விடிந்தும் விடியா நிமிடம் 

விடிந்தால் வாழ்க்கை தொடங்கும்  நலமா……

ஒரு வானம் போதாதென்று பலவானம் கேட்ப்போமின்று 

கைகோர்த்து ஒன்றாகப் பறந்தோடவே

நெடுங்காலம் கனவில் வாழ்ந்தோம்

இப்போது கைகள் கோர்த்தோம்

இறந்தாலும் எதிர்ப்போமே பிரியாமலே

இடமும் வலமும் யுத்தம்

இடையில் குயிலின்  சத்தம்

இதயம் முழுக்கக் கேட்டால் சுகமே

எதிரும் புதிரும் பாரம்

இருந்தும் நெஞ்சில் ஈரம் 

அன்பே என்றும் இன்பம் தருமே…..

About these ads

~ by Dimsy on August 20, 2010.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
Follow

Get every new post delivered to your Inbox.

Join 98 other followers

%d bloggers like this: